முருக பெருமான் தன் அடியாரை காக்க அவ்வப்போது பல ஞானியர்கள் மூலம் பல அறிய மந்திரங்களை உருவாக்கி அதன் மூலம் தன் பக்தர்களை கண்ணின் இமை போல காப்பான் என்பது உறுதி.
அப்படி இந்த யுகத்தில் மனிதர்களின் பல துயரை துடைக்க அருணகிரிநாத சுவாமிகள் அருளிய வேல் வகுப்பை வள்ளி மலை சச்சிதானந்த சுவாமிகள் மூலம் வேல்மாறல் மஹா மந்திரமாக கொடுத்தார்! ஆனால் இந்த அற்புத மந்திரம் பல ஆண்டுகள் வெளியே தெரியாமல் போனது.
இதுவும் முருகனின் திருவருள் தான் ஆம் நோய் முற்றும் போது தானே மருந்தின் அருமை புரியும். இன்று உலகின் பிணி அதிகமாக மீண்டும் வேல்மாறல் மஹா மருந்து முருகனின் திருவருளால் திரு விஜயகுமார் அய்யா அவர்களால் வெளிக்கொணரபட்டது. மேலும் இந்த வேல்மாறல் மஹா மந்திர வழிபாட்டை கூட்டு வழிபாடாக நடத்த திருச்செந்தூர் ஆண்டவன் உத்தரவு இட்டான் அதை தொடர்ந்து 1-09-2024 அன்று கோவை கௌமார மடாலயத்தில் தொடங்கி இன்று உலகம் முழுக்க பல லட்சம் அடியார்களின் துயரை துடைத்து அவர்கள் வாழ்கையில் முருக பெருமானின் அருளை பதிக்க வைத்தது. வேல்மாறல் சேவா அறக்கட்டளையாக மலர்ந்து நிற்கிறது
சக்திமிக்க வேல்மாறல் வழிபாடு முருக பெருமான் வகுத்த நெறிப்படியே நடக்கிறது! காலையில் விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை, புனுகு சாற்றி, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை என்று முதல் கால பூஜை நிறைவுறும்.
இரண்டாம் காலமாக கந்தர் அனுபூதி பாட பாட வேலாயுத சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும் அதை தொடரந்து இராஜ அலங்காரம் , வேல்மாறல் மந்திர பாராயணம் புஷ்பாஞ்சலி என்று வழிபாடு நிறைவு பெரும்
வழிபாடு நடக்கும் இடம் பெரும்பாலும் மண்டபங்களாக இருந்தாலும். வேலாயுத சுவாமியின் ஆற்றல் பூஜை தொடங்கிய சில நேரத்திற்குள் அந்த இடம் கோவிலாக மாறிவிடும். இதை பல அடியார்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து உள்ளனர்!
மேலும் பல அடியார்கள் எந்த வேண்டுதலுக்காக வழிபாட்டிற்கு வந்தார்களோ அந்த வேண்டுதல் வழிபாடு முடியும் முன்பே வேண்டுதல் நிறைவேறிய பல அதிசயங்களை கண்கூட கண்டு இருக்கின்றனர்
நோக்கம் மற்றும் தொலைநோக்கு :
நோக்கம்:
- முருக பக்தியும் அவன் அருள் மட்டுமே எங்கள் சொத்து.
- முருக சேவையே உயிர் மூச்சு.
- உள்ளங்கள் தோறும் திருப்புகழ் மற்றும் வேல்மாறல் மந்திரத்தை பதிய வைப்பது.
- முருகனுக்கு சமர்ப்பிக்கும் அனைத்து பூஜை பொருளும் உயர்ந்த தரத்துடன் இருந்தல் வேண்டும்.
- வேல்மாறல் வழிபாட்டிற்கு வரும் அனைத்து முருக அடியார்களையும் முருகனின் வடிவமாக பாவிப்பது.
- வேல்மாறல் வழிபாட்டை உலகம் முழுக்க நடத்ததுவது.
தொலைநோக்கு:
வேல்மாறல் அறக்கட்டளை வழிபாட்டோடு நின்று விடாமல் முருகனின் திருவருளால் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறோம், பல குழந்தைகளுக்கு கல்வி கல்விக்கட்டணம் செலுத்துவது, மருத்துவ முகாம், மருத்துவ உதவி, கோவில் உழவார பணிகள், இன்னும் பல சேவைகளை அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறோம்!
