Skip to content Skip to footer

அறக்கட்டளை விவரங்கள்

பக்திநம் ஆன்மாவுக்காக

சேவைநம் சமுதாயத்துக்காக

ஒற்றுமைநம் எதிர்காலத்துக்காக

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார்! ஆனால் அந்த இறைவனே எனக்கு வாழ்கையின் நோக்கமாக வருவான் என்று நான் ஒருப்போதும் நினத்தது இல்லை!

எந்த ஒரு தவமோ, முயற்சியோ இல்லாத என்னையும் ஒரு பொருளாக முருக பெருமான் நினைத்திருக்கிறான் என்று நினைக்கும் பொதுயெல்லாம் உள்ளமும் உடலும் நடுங்குகிறது, நாம் இதற்கு தகுதியானவான என்று !

ஆனால் வழியை காட்டிய முருகன் அதில் செல்ல துணையாகவும் வருவான் என்பது போல 3 முறை கனவில் திருச்செந்தூர் ஆண்டவன் தோன்றி ஆலயத்திருக்கு வர உத்தரவு இட்டான்!

பல தடைகளுக்கு பிறகு திருச்செந்தூர் மண்ணை மிதித்து சண்முகரை பார்த்த பின் தான் புரிந்தத்து முருக பக்தி தான் என் வாழ்க்கை என்று ! அதை தொடர்ந்து என் வாழ்கையில் நடந்த அனைத்தும் அவன் ஆணை தான் !

அப்படி அவன் இட்ட கட்டளையின் படி தொடங்கியது தான் வேல்மாறல் வழிபாடு இதற்கு சாட்சி முதல் வேல்மாறல் நடக்கும் போதே அந்த இடத்திருக்கு மயில் வடிவில் வந்து காட்சி தந்தான் கந்தவேல் பெருமாள்!

பல பக்தர்களின் வாழ்கையை மாற்றி கண்ணீரை துடைத்த வேல்மாறல் வழிபாட்டு இன்று ஒரு அறக்கட்டளையாக உலகம் முழுக்க பரவி நிற்கிறது!!

இது வெறும் ஏதோ ஒரு வழிபாட்டு நிகழ்ச்சி அல்ல ! இது முருகனை உணர்ந்து அவனை நேரடி அனுபவமாக்கும் அற்புத சக்தி கூடம்!

அருணகிரி பெருமான் சொல்லியது போல முருகனின் அருளை பெற்று விட்டால் அதை சொல்லால் உணர்த்த முடியாது!! அதே போல் வேல்மாறல் வழிபாட்டில் கலந்து கொண்டால் மட்டுமே இதன் அருள் தன்மையை உணர முடியும் !

இந்த உயிரும் உடலும் உள்ள வரை முருகனின் திருவடிக்கு சேவை செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்ட எனக்கு முருகன் கொடுத்த வரம் தான் வேல்மாறல் சேவா அறக்கட்டளை!!

ஒருமுறை கலந்து கொண்டு அவனுக்கு சேவை செய்து பாருங்கள் ! நீங்கள் பார்க்க வேண்டாம் முருகன் உங்களை பார்த்து கொள்வான் !

வேல்மாறல் சேவா அறக்கட்டளை
முகவரி:

வடவள்ளி, கோவை

எங்களைத் தொடர்பு கொள்ள

+91 73396 63756

© பதிப்புரிமை 2026 – அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.தளம் praveenwebdesign ஆல் உருவாக்கப்பட்டது.